Jan 18, 2026
Thisaigal NewsYouTube
ஆப்பிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி
உலகச் செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி

Share:

என்கோமாசி, ஜனவரி.18-

ஆப்பிரிக்க நாடுகளான மொசாம்பிக், ஜிம்பாப்வே, தென்ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை, வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 100 பேர் பலியாகி விட்டனர். மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மொசாம்பிக் கடுமையாகக் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 103 பேர் பலியாகி விட்டனர். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், பள்ளிகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இதே போல் தென்ஆப்பிரிக்காவின் இரண்டு வடக்கு மாகாணங்களில் கனமழைக்கு 30 பேர் உயிரிழந்தனர். வடக்கு லிம்போபோ மாகாணத்தில் வௌ்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வீட்டின் கூரை, மரங்கள் மீது தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் குவிக்கப்பட்டு, ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஜிம்பாப்வே நாட்டில் கனமழை, வௌ்ளம் காரணமாக 70 பேர இறந்து விட்டனர். பள்ளிகள், பாலங்கள், சாலைகள் உள்பட அனைத்தும் வௌ்ளத்தால் சூழ்ந்துள்ளன. இதுவரை 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து விட்டதாகவும், மடகாஸ்கர், மலாவி மற்றும் ஜாம்பியாவிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே தெரிவித்துள்ளது.

Related News