Jan 17, 2026
Thisaigal NewsYouTube
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: எழுவர் பலி
உலகச் செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு: எழுவர் பலி

Share:

கேப் அவிஎர், ஜனவரி.17-

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதுடன் தப்பி ஓடியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மிரட்டி பணம் பறித்தல் வழக்குடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்படும் குற்றச் செயல்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக் கட்டத்தில் மட்டும் குற்றச் செயல்களால் தினமும் சுமார் 63 பேர் இறந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related News