பேங்காக், ஜனவரி.16-
தாய்லாந்தில் கட்டுமானப் பணியின் போது ராட்சத இயந்திரம் ஓடும் ரயில் மீது விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
தாய்லாந்தில் பாங்காக்கிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகோன் ராட்சசிமாவில், பேங்காக்கில் இருந்து உபோன் ராட்சதானி நோக்கி 195 பயணிகளுடன் ரயில் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் ரயில் மீது, அதிவேக ரயில் பாதைக்கான கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்தன. இடிபாடுகளுக்கிடையே சிக்கி 22 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இன்று காலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது.
மேலும் இந்த விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு கருவிகள் மூலம் இடிபாடுகளை அகற்றி காயமடைந்தவர்களை மீட்டனர்.








