Oct 8, 2026
Thisaigal NewsYouTube

காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. அத்தகவலை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. படக்குழு இதற்காக 3 ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் பணியாற்றிய சிலரின் மரணங்கள் அடுத்தடுத்து நடந்தது. காந்தாரா திரைப்படத்தால் தான் இவ்வாறு நடக்கிறது என பேச்சுகள் திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு அஜேஷ் லோக்நாத் இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →