Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நடிகை ரவீனா ரவி - இயக்குனர் தேவன் ஜெயக்குமார் திருமணம்
சினிமா

நடிகை ரவீனா ரவி - இயக்குனர் தேவன் ஜெயக்குமார் திருமணம்

Share:

பிரபல பின்னணிக்குரல் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவி, திரைப்பட இயக்குனர் தேவன் ஜெயக்குமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

'ஒரு கிடாயின் கருணை மனு', 'மாமன்னன்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ரவீனா ரவி மற்றும் 'வாழையடி' திரைப்படத்தின் இயக்குனர் தேவன் ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தத் தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ரவீனா ரவி பல முன்னணி நடிகைகளுக்குத் தமிழில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News