Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்த நடிகர் அரவிந்த் சாமி
சினிமா

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்த நடிகர் அரவிந்த் சாமி

Share:

அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்து விட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதன் பின் கடல் படத்தில் மீண்டும் நடித்தார்.

ஆனால், இவருக்கு சரியான கம்பேக் படம் என்றால் அது, இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன்தான். இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு பிரேம் குமார் இயக்கிய மெய்யழகன் படத்தில் அருள்மொழி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து நம்மை நெகிழ வைத்தார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த வாரம் காந்தி டாக்ஸ் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகர் அரவிந்த் சாமி பேட்டி ஒன்றில், 'தான் ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்' என உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதில், "2005ஆம் ஆண்டு ஏற்பட்ட காயம் என்னை ஒன்றரை வருடம் படுக்கையிலேயே வைத்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என முடிவு செய்ததால், அந்த வலி நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நேரத்தில், கேரளாவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை சந்தித்தேன். சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்" என அரவிந்த் சாமி கூறியுள்ளார். 

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்