Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அவரை வைத்து ரமணா 2 படம் எடுக்க ஆசை - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

கேப்டன் விஜயகாந்த், தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத நடிகர். படத்தில் நடிக்கும் போதே தன்னுடைய நாட்டுப்பற்று, எல்லோருக்கும் மனதார உதவி செய்வது போன்ற விஷயங்களை அதிகம் காட்டினார். இவரது மகனான சண்முக பாண்டியன் அவரது அப்பாவை போல சினிமாவில் களமிறங்கியுள்ளார் என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பெருமை பொங்கக் கூறியுள்ளார்.

அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் படைத் தலைவன். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில், கேப்டன் விஜயகாந்தால் தமிழ் சினிமாவில் பயன் அடைந்தவர்கள் பலர், அவர்களில் நானும் ஒருவன்.

அவரால் இன்றைக்கும் பலர் தங்களது பசியைப் போக்கி வருகிறார்கள். கேப்டன் படப்பிடிப்புக்கு வருகிறார் என்றாலே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடி விடுவார்கள். அவரது கம்பீரம் வேறு எந்த நடிகருக்கு வரும்.

அதே போல் ரமணா படத்தில் இடம் பெற்ற மிக நீண்ட வசனங்கள் தொடங்கி அவரது டயலாக்குகள் அனைத்துமே அதிகபட்சம் இரண்டு டேக்குகள் மட்டும் தான் எடுத்துக் கொண்டார். படைத் தலைவன் படத்தில் ஒரு யானையும் ஒரு சிங்கமும் நடித்துள்ளது போல் உள்ளது. சண்முக பாண்டியன் தொடர்ந்து வளர வேண்டும். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் கண்கள் அவரது மகன் சண்முக பாண்டியனிடம் அப்படியே இருக்கிறது. இவரை வைத்து ரமணா 2ம் பாகம் எடுக்க ஆசை எனப் பேசியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →