Jul 21, 2026
Thisaigal NewsYouTube
"அவசியம் ஏற்பட்டால் நடிகையின் பெயரையும் மனுவில் சேர்ப்பேன்" - விவாகரத்து கோரியுள்ள விஜய்யின் மனைவி சங்கீதா அறிவிப்பு
சினிமா

"அவசியம் ஏற்பட்டால் நடிகையின் பெயரையும் மனுவில் சேர்ப்பேன்" - விவாகரத்து கோரியுள்ள விஜய்யின் மனைவி சங்கீதா அறிவிப்பு

Share:

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தான், இந்த விவாகரத்திற்கு முக்கியக் காரணமாக அவர் தனது மனுவில் குறிப்பிடப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், சம்பந்தப்பட்ட நடிகை வந்ததால், தங்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகவும், இதனால் லண்டன் சென்று விட்டதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நடந்த சமரசப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, மீண்டும், சென்னை வந்து விஜயுடன் சேர்ந்து வாழத் தொடங்கியதாகவும் அவர் விவரித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அவசியம் ஏற்பட்டால், அந்த நடிகையின் பெயரையும் தமது விவாகரத்து ஆவணங்களில் சேர்க்கவுள்ளதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்