Sep 29, 2026
Thisaigal NewsYouTube
அது உண்மை இல்லை: நடிகர் நாகார்ஜூனா
சினிமா

அது உண்மை இல்லை: நடிகர் நாகார்ஜூனா

Share:

நடிகர் நாகார்ஜூனா கடைசியாக ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து இருந்தார். வில்லன் ரோலில் அவரது நடிப்பும் அதிகம் பாராட்டுகளைப் பெற்றது.

இது ஒருபுறம் இருக்க கடந்த டிசம்பரில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற துரந்தர் என்ற ஹிந்தி படத்தில் Rehman Dakait என்ற ரோலில் நடித்த அக்ஷய் கண்ணா திடீர் பிரபலமாகியுள்ளார்.

அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் நாகார்ஜூனாவைத் தான் அணுகினார்கள் என்றும், அவர் அதில் நடிக்க மறுத்து விட்டார் என்றும் செய்தி அண்மையில் பரவியது.

இந்நிலையில் நடிகர் நாகார்ஜூனா அளித்த பேட்டியில் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். "எனக்கு அந்த பட வாய்ப்பு வரவே இல்லை. துரந்தர் சூப்பரான படம். ஆதித்ய தார் உண்மையில் வியக்கத்தக்க வகையில் இயக்கி இருந்தார். அவரது முந்தைய படமான Uri படமும் எனக்கு பிடித்திருந்தது."

"துரந்தரில் எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். அடுத்து பாகத்திற்காக நானும் காத்திருக்கிறேன்" என நாகார்ஜூனா தெரிவித்து இருக்கிறார்.  

Related News