Oct 6, 2026
Thisaigal NewsYouTube

'96' படத்தின் 2-ம் பாகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
'96' படத்தின் 2-ம் பாகம்

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படம் '96'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிரேம் குமார்.

96 படத்தில் இடம் பெற்ற ரீயூனியன் காட்சி, பள்ளி பருவக் காட்சி, த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையிலான பேச்சுவார்த்தை என பல்வேறு விஷயங்கள் ரசிக்க வைத்தன.

பழைய நினைவுகளை நமக்கு மீண்டும் திரையில் காட்டிய '96 திரைப்படத்தை ரசிகர்கள் மிகவும் கொண்டாடினார்கள். இதனால் இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க இயக்குநர் முடிவு செய்தார்.

இந்நிலையில், தற்போது 96 படம் குறித்து இயக்குநர் பிரேம் குமார் சில அதிரடி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், " 96 படத்தின் 2ம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்து விட்டேன். நான் எழுதியதில் மிகவும் சிறந்த கதை இது. 96 படத்தின் முதல் பாகத்தை விட இது அற்புதமாக இருக்கும். அதே நடிகர்களை வைத்து 2ம் பாகத்தையும் எடுக்க விரும்புகிறேன். இல்லையெனில் இப்படத்தை எடுக்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →