Oct 6, 2026
Thisaigal NewsYouTube

ரஜினி, கமல் படத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஜினி, கமல் படத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர்

தமிழ் சினிமாவில் இப்போது பரவலாகப் பரபரப்பாகப் பேசப்படுவது ரஜினி-கமல் இணையும் படம் குறித்து தான்.

46 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதால் இப்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்க உள்ளது.

படத்திற்கான கதையும் இயக்குனரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அண்மையில் ரஜினி கூறியிருந்தார்.

முன்னதாக இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் வெளியேறியுள்ளாராம்.

அவருக்கு பதில் ரஜினி-கமலை இயக்கும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலும் உண்மையா என தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →