Jul 22, 2026
Thisaigal NewsYouTube
ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு
சினிமா

ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்குப்பதிவு

Share:

இயக்குனர் பா. ரஞ்சித், ‘வெட்டுவம்’ படத்தின் படப்பிடிப்புகளைப் பகுதிகளில் நடத்தி வருகிறார். படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் முக்கியமான காரை விரட்டிச் செல்லும் காட்சிகள் விழுந்தமாவடி பகுதியில் எடுக்கப்பட்டன. படக்காட்சியின் ஒரு பகுதியாக, கார் ஒன்று வேகமாக வந்து, மேலே பறந்து கீழே விழும் காட்சி எடுக்கப்பட்டது. இந்தக் காட்சியில் 52 வயதான சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டிருந்தார்.

அப்போது காருடன் மேலே பறந்த அவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில், காரின் உள்ளே சிக்கி வெளியே வர முடியாமல் மயங்கினார். இதனைக் கண்ட இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் படக் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தொடர்பில் காவல்துறை இயக்குநர் பா. ரஞ்சித் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அலட்சியமாகச் செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா. ரஞ்சித் மீது வழக்குப்ப... | Thisaigal News