Oct 8, 2026
Thisaigal NewsYouTube

துடரும் இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் கார்த்தி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துடரும் இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் கார்த்தி

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் திரில் படமான துடரும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தை தருண் மூரத்தி இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி அடுத்த படத்தில் இணைவது தொடர்பாக தருண்மூர்த்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தால், மாமன், கருடன் படத்தை தயாரித்த ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கும் எனவும் தெரிகிறது.

துடரும் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய போது கார்த்தி, தருண் மூர்த்தியை அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →