Sep 30, 2026
Thisaigal NewsYouTube

அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?

தமிழ் சினிமா முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இட்லி கடை மற்றும் ரெட்ட தல ஆகிய இரு படங்கள் வெளியாகின.  

இதில் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இவர் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்து வெளிவந்த ரெட்ட தல படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. 

அண்மையில் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தார் அருண் விஜய். இந்த நிலையில், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ளபடம் குறித்தும், யார் இயக்குநர் என்பது குறித்தும் பேசியுள்ளார். 

அவர் கூறியதாவது "என்னுடைய அடுத்த படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது" எனக் கூறியுள்ளார். 

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →
அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்? | Thisaigal News