Oct 5, 2026
Thisaigal NewsYouTube

இன்பநிதி - மாரி செல்வராஜ் கொடுத்த புதிய தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இன்பநிதி - மாரி செல்வராஜ் கொடுத்த புதிய தகவல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதனிடையே, 'பைசன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்து உதயநிதியின் மகன் இன்பநிதியைக் கதாநாயகனாக வைத்துப் படம் எடுக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும் இத்தகவல் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். 'பைசன்' படம் வெளியான பிறகு தனுஷை வைத்து தான் தன் அடுத்தப் படத்தைத் தொடங்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இன்பநிதி மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் வழி இன்பநிதி திரைத்துறைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →