Oct 5, 2026
Thisaigal NewsYouTube

கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கூலி படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம்

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த கூலி எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. விமர்சன ரீதியாக பின்னடைவைச் சந்தித்தது. பலரும் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

கூலி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமல் - ரஜினி இணையும் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளிவந்தது.

இப்படம் உருவாகிறது என்பது உண்மைதான் என ரஜினி மற்றும் கமல் உறுதியாகக் கூறி விட்டனர். ஆனால், அப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அண்மைய தகவல் என்னவென்றால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் பவன் கல்யாணை வைத்து புதிய படம் இயக்கப் போவதாகத் தகவல் உலா வருகிறது. இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

கே.வி.என் நிறுவனம் தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தைத் தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம் லோகேஷ் - பவன் கல்யாண் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →