Oct 14, 2026
Thisaigal NewsYouTube

கார்த்தியின் 29 - வது படத்தின் கதைக்களம் இதுவா?.. வெளிவந்த அதிரடி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக இருப்பவர்களில் கார்த்தியும் ஒருவர். இவர் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் மெய்யழகன்.

பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மெய்யழகன் திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது.

தற்போது கார்த்தி 'சார்தார் 2' படத்தில் நடத்தி வருகிறார். கார்த்தி அடுத்து யார் படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கார்த்தியின் 29-வது படத்தின் கதைக்களம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமான கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →