Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தனுஷின் அடுத்த படம்.. . உண்மை சம்பவம் தான் கதையா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:

நடிகர் தனுஷ் தற்போது கோலிவுட்டில் படுபிஸியான ஒருவராக இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குனராகவும் அவர் பல படங்களை இயக்கி வருகிறார்.

‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கி இருக்கும் அவர், ‘குபேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் இயக்கி இருக்கும் மற்றொரு படமான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் அடுத்த வாரம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்திற்காக மாரி செல்வராஜ் உடன் கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு அவர்கள் கூட்டணி சேர இருக்கின்றனர்.

1970ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →