Jun 6, 2026
Thisaigal NewsYouTube
தியேட்டரில் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய ‘கருப்பு’
சினிமா

தியேட்டரில் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய ‘கருப்பு’

Share:

பக்தியும், விறுவிறுப்பும், வாய்மையும், நேர்மையும் நிறைந்த ஒரு அருமையான கதைக்களத்தைக் கொண்டதுதான் இந்த ‘கருப்பு’. ஒருபுறம் நீதிமன்றத்தின் ஊழல் பின்னணியும், மறுபுறம் தனது மகளின் ஆபரேஷனுக்காக நகைகளை மீட்கப் போராடும் ஒரு தந்தையின் தவிப்பும் என உணர்வுப்பூர்வமாக நகர்கிறது கதை. வழக்கறிஞர் பிரீத்தியாக வரும் திரிஷாவுடன் இணைந்து, ஏழை எளிய மக்களின் நீதிக்காகப் போராடும் ஒரு தெய்வீகப் பின்னணியே இப்படத்தின் முக்கியக் கருவாகும்.

இப்படத்தில் மகளின் மருத்துவச் செலவிற்காகத் தவிக்கும் அந்த ஏழைத் தந்தையின் உணர்ச்சிகரமான நடிப்பு நம் நெஞ்சை நனைக்கிறது. இறுதிவரை போராடியும், கடைசியில் தனது மகளைக் காப்பாற்ற முடியாமல் போன துர்ப்பாக்கியத்திற்காக, தன்னை ஏமாற்றிய வழக்கறிஞர்கள் மீது நகைகளைத் தூக்கி எறியும் ஒரு தந்தையின் அந்த ஆக்ரோஷமான, வேதனை நிறைந்த நடிப்பு பார்ப்பவர் கண்களைக் குளமாக்குகிறது. திரையரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையும் கலங்கடிக்கும் மிக உன்னதமான காட்சி இது.

சூர்யாவின் கம்பீரம்: இப்படத்தில் சூரியாவின் பக்தி கலந்த கருப்பு கம்பீரம் ஒட்டுமொத்த திரையரங்கையும் அதிர வைக்கிறது.

மிரட்டலான இசை: சாய் அபியங்கரின் பின்னணி இசை திரையரங்கையே அலறவைக்கும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு: பாலாஜியின் எதார்த்தமான நடிப்பு, தனது வழக்கமான நகைச்சுவையுடன் படத்தின் கதையை விறுவிறுப்பாக முன்னோக்கி நகர்த்திச் செல்கிறது.

ஏன் பார்க்க வேண்டும்?

பள்ளி விடுமுறை காலம் தொடங்கிவிட்ட இந்த வேளையில், பிள்ளைகளுக்கு நல்ல கருத்துகளைக் கற்றுத்தரும் படமாக இது அமைந்துள்ளது. வாய்மையையும் நேர்மையையும் போதிக்கும் அதே வேளையில், த்ரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்து உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும்.

இது கைப்பேசியிலோ, தொலைக்காட்சியிலோ பார்க்கும் படம் அல்ல; தியேட்டரில் மட்டுமே பார்த்து கொண்டாட வேண்டிய ஒரு படைப்பு. இத்திரைப்படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தால் மட்டுமே கருப்புவின் உண்மையான ஆக்ரோஷத்தையும், பக்தி கலந்து அவரின் கம்பீரத்தையும் பார்க்க முடியும். பக்தி உணர்வைக் கொண்டாடும் வகையில் கருப்பனின் ஒவ்வொரு வேட்டையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. கருப்பனின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களையும் கவர்கிறார் கருப்பு.

- இ.எம்.சாமி

Related News

தமிழ் இசையின் தனித்துவத்தை உலக மேடைகளில் அப்படியே கொண்டு சேர்ப்பேன்: பாடகி தீ உறுதி

தமிழ் இசையின் தனித்துவத்தை உலக மேடைகளில் அப்படியே கொண்டு சேர்ப்பேன்: பாடகி தீ உறுதி

ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் 'கருப்பு': 20 நாட்களில் உலகளவில் ரூ.297.12 கோடி வசூல்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

சிவராஜ்குமார் - அபிஷன் இணையும் புதிய குடும்பத் திரைப்படம்: தந்தை - மகனாக நடிக்க ஒப்பந்தம்!

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

மாரி செல்வராஜின் அடுத்த படம் 'மஞ்சணத்தி' - இசைஞானி இளையராஜாவுடன் இணையும் புதிய கூட்டணி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி

'கருப்பு' படத்தின் வெற்றிக்கு அமீர் கான் பாராட்டு: முக்கிய வசனம் பேச சூர்யா தயங்கியதற்கான காரணத்தை உடைத்த ஆர்.ஜே. பாலாஜி