Aug 16, 2026
Thisaigal NewsYouTube
இயக்குநருக்கு கார் பரிசு: நெகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்
சினிமா

இயக்குநருக்கு கார் பரிசு: நெகிழ்ச்சியில் விஷ்ணு விஷால்

Share:

நடிகர் விஷ்ணு விஷால் தனது நெருங்கிய நண்பரும், 'கட்டா குஸ்தி 2' படத்தின் இயக்குநருமான செல்லா அய்யாவுவிற்கு விலை உயர்ந்த எஸ்யூவி காரைப் பரிசாக அளித்து, நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கடந்த 11 ஆண்டுகளாகத் தனது வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகள் அனைத்திலும் செல்லா அய்யாவு உறுதுணையாக இருந்ததை விஷ்ணு விஷால் இந்த பதிவில் நினைவு கூர்ந்துள்ளார். கடினமான காலங்களிலும் தன்னை வழிநடத்தி, நம்பிக்கையூட்டிய அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளார். விஷ்ணு விஷாலின் இந்தச் செயல் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் நெகிழ்ச்சியையும் பெற்று வருகிறது.

Related News