விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியான 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியான இப்படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் இந்த வெற்றிக்கு அடையாளமாக, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு சொகுசு கார் ஒன்றையும், இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்குப் பரிசுகளையும் வழங்கி கௌரவித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி தொலைக்காட்சிகளான சன் டிவி அல்லது விஜய் டிவி இந்த உரிமையை வாங்கவில்லை என்றும், மாறாகத் தமிழில் புதிதாகத் தொடங்கவிருக்கும் 'சோனி விழா' தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து 'கட்டா குஸ்தி 2' படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








