தமிழ்நாடு, செப்டம்பர்.28-
தமிழ்நாடு, கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த இந்தப் பேரணியில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகமானோர் கூடியதால் இந்தக் கோர விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம்.
இதனையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மூத்த தலைவர்கள் புஸி ஆனந்த், நிர்மல் குமார், வி.பி. மதியழகன் ஆகியோர் மீது காவற்படையினர் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் தாம் 'மனம் உடைந்ததாக' அக்கட்சியின் தலைவரான விஜய் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.