Jul 19, 2026
Thisaigal NewsYouTube
இனி வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன்; நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் - ஆக்சன் கிங் அர்ஜுன் அதிரடி முடிவு!
சினிமா

இனி வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன்; நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் - ஆக்சன் கிங் அர்ஜுன் அதிரடி முடிவு!

Share:

திரைத்துறையில் வில்லன் மற்றும் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் அர்ஜுன், இனிமேல் அத்தகைய வேடங்களில் நடிக்காமல் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாகவுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "நான் திட்டமிட்டு எதிர்மறை கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. மணிரத்னம் சார் 'கடல்' படத்திற்காகக் கேட்டபோது நடித்தேன். பின்னர் 'இரும்புத்திரை', 'லியோ', 'விடாமுயற்சி' ஆகிய படங்களில் வித்தியாசமான பரிமாணங்கள் இருந்ததால் நடித்தேன். ஆனால், இனி அதோடு சரி. இனிமேல் நேர்மறையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன்" என்று கூறினார். மேலும், நடிகர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளது ஒரு மிகப்பெரிய சாதனை என்றும், தனது திரையுலகைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராகப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அர்ஜுன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related News