Jul 21, 2026
Thisaigal NewsYouTube
ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா
சினிமா

ரஜினிக்கு சொன்ன கதையில் இப்போது சூர்யா

Share:

கருப்பு, சூர்யா 46 & 47 என தொடர்ந்து மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா. இதில் கருப்பு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. தமிழக தேர்தல் முடிந்த பின் இப்படம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

சூர்யா 46 மற்றும் 47 ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா 47 படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சூர்யா அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து GOD Of Love என்கிற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில், முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ரஜினியிடம் ஒரு கதை கூறியிருந்தார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. கதை பிடித்திருந்தாலும் ரஜினி - அஸ்வத் மாரிமுத்து இணைவதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், ரஜினிக்கு சொன்ன கதையை தற்போது சூர்யாவிடம் கூறி ஓகே செய்துள்ளாராம் அஸ்வத்.

இது கமர்ஷியல் என்டர்டெய்னிங் படமாக, அயன் படத்தில் இருக்கும் வைப் இப்படத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது தற்போது திரை வட்டாரத்தில் உலா வரும் தகவல் மட்டும்தான். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கடந்த ஆண்டு டிராகன் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்