Sep 30, 2026
Thisaigal NewsYouTube

ஜனநாயகன் பொங்கலையொட்டி வெளியாகவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜனநாயகன் பொங்கலையொட்டி வெளியாகவில்லை

ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கேட்டு நீதிமன்றத்தில் கேவிஎன் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வந்தது. அதில் படத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் உடனே தணிக்கை வாரியம் வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் மேல்முறையீடு செய்வதாக தெரிவித்தார்.

அதன் பிறகு விசாரணை நடைபெற்றது. அதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தார்.

மேலும் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 21ம் தேதி இந்த வழக்கின் அடுத்த விசாரணையைத் தள்ளி வைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.

இதனால் பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியாக வாய்ப்பு இல்லை. இதனால் விஜய் ரசிகர்கள் மேலும் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகன் தயாரிப்பாளர் உடனே மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →