Oct 18, 2025
Thisaigal NewsYouTube
விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா..
சினிமா

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா..

Share:

: கடந்த சில மாதங்களாகவே விஜய் நடித்து வரும் லியோ படத்தைப் பற்றிய பேச்சு தான் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதையே ஓரம் கட்டும் அளவுக்கு தற்போது அவர் தன்னுடைய அரசியல் நகர்வுக்கான வேலையை செய்து வருகிறார். அதுதான் இப்போது திரையுலக வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதன் முதல் படியாக மாணவர்களை வைத்து விஜய் நகர்த்திய காய் நன்றாகவே வேலை செய்கிறது. இப்போது விஜய்யின் அரசியல் வரவு எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் மாணவர்களை சந்தித்த நாள் அன்று விஜய் நடந்து கொண்ட முறையும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இப்பொழுதுதான் விஜய் மாணவர்களின் நலனில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார். ஆனால் இதற்கு முன்பாகவே சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி படிக்க வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு தன் சொந்த செலவில் கல்வியை கொடுத்து வந்தார். இது அப்போதே பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

Related News

விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய சூர்யா.. | Thisaigal News