Oct 7, 2026
Thisaigal NewsYouTube

நடிகர் நானியுடன் 3-வது முறையாக இணையும் நடிகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நடிகர் நானியுடன் 3-வது முறையாக இணையும் நடிகை

தெலுங்கு திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தென்னிந்திய சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக மாறியுள்ளார் நடிகர் நானி. தெலுங்கில் நடித்து வந்த நானி, வெப்பம் படத்தின் மூலம் தமிழில் நுழைந்தார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தசரா மற்றும் ஹை நானா ஆகிய இரு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது இயக்குநர் சேகர் கம்முலா நானியை மனதில் கொண்டு ஒரு கதையை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. இதில் நடிகை சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சாய் பல்லவி ஏற்கனவே, நானியுடன் எம்.சி.ஏ மற்றும் ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்திருந்தார். சேகர் கம்முலா படத்தின் மூலம் நானி மற்றும் சாய் பல்லவி மூன்றாவது முறை இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →