Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

கோத்தா கினபாலு அடுக்குமாடிக் குடியிருப்பின் 17 வது மாடியிலிருந்து விழுந்த பெண் - போலீஸ் விசாரணை

Share:

நேற்று மாலை கோத்தா கினபாலு, ஜாலான் 18 பகுதியில் அமைந்துள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியிலிருந்து கீழே விழுந்ததாக நம்பப்படும் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மாலை 6.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 50 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் சடலம், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் அங்குள்ள பராமரிப்பாளர்களால் கண்டறியப்பட்டது.

மேலிருந்து கீழே விழுந்ததில் அவரது சடலமானது இரண்டு துண்டுகளாக சிதறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கோத்தா கினபாலு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News