Jun 12, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் வேப் திரவத்தில் போதைப் பொருள் கலந்து விற்பனை - 6 பேர் கைது

Share:

போதைப்பொருள் கலந்த வேப் பொருட்களை விநியோகித்தாக சந்தேகப்படும் மலேசியர் உட்பட ஆறு பேரை, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையான ஜேஎஸ்ஜேஎன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வேப் பொருட்களை பயன்படுத்திய பின்னர் மயக்க நிலையில் இருந்த இரண்டு ஆடவர்களின் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிலாங்கூர் உள்ள சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சென்ற அதிகாரிகள், அங்கு தங்கியிருந்த உள்ளூர் ஆடவர் உட்பட, வேப் விநியோகஸ்தர்கள் என நம்பப்படும் 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கெட்டமின் கலந்து வேப் திரவ பாட்டில்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், வேப் பயன்பாட்டை புக்கிட் அமான் மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், அது போதைப்பொருள் பயன்படுத்தும் ஒரு மாற்று வழியாக மாறி வருவதுடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையையும் உருவாக்குவதாக புக்கிட் அமான் ஜேஎஸ்ஜேஎன் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கவலை தெரிவித்துள்ளார்.

Related News