Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா
தற்போதைய செய்திகள்

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

Share:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை சிறையிலிருந்து விடுவிக்கும் அதிகாரம், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தலைமையிலான மன்னிப்பு வாரியத்திற்கு மட்டுமே உரியது என்றும், இதில் எந்தவொரு அரசியல் தொடர்பும் இல்லை என்றும் அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றால், அது நஜிப்பின் விடுதலைக்கு வழிவகுக்கும் என்ற அரசியல் பேச்சுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அஸாலினா இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, நஜிப்பை விடுவிப்பதற்காகவே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி இந்த ஜோகூர் தேர்தலில் இழுத்து விடப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நஜிப் விடுவிக்கப்பட்டால் அமைச்சரவையில் இருந்து முதலில் விலகப்போவதாக ஜசெகவைச் சேர்ந்த அமைச்சர் ங்க கோர் மிங் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News