Oct 18, 2025
Thisaigal NewsYouTube
யூரோ தகுதிச்சுற்று: கிரீஸை 1-0 என வீழ்த்தியது பிரான்ஸ்
விளையாட்டு

யூரோ தகுதிச்சுற்று: கிரீஸை 1-0 என வீழ்த்தியது பிரான்ஸ்

Share:

எம்பாப்பே 55-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார் 69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினார் ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையில் தகுதிச்சுற்று நடைபெற்று யூரோ கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டும். 2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

Related News