Jul 28, 2026
Thisaigal NewsYouTube
7 வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது: உள்துறை அமைச்சர் தகவல்
விளையாட்டு

7 வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியது: உள்துறை அமைச்சர் தகவல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

ஹரிமாவ் மலாயா பாரம்பரிய அணியைச் சேர்ந்த ஏழு வீரர்கள் சம்பந்தப்பட்ட ஆவண மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்காக அவை சட்டத்துறை அலுவலகமான ஏஜிசிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சட்டத்துறை அலுவலகத்திடமிருந்து அறிவுறுத்தல்கள் கிடைத்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

சுயேட்சை விசாரணைக்குழு கண்டறிந்தவைகள் தொடர்பாக மலேசிய கால்பந்து சங்கமான எஃப்ஏஎம் அளித்த புகாரை போலீஸ் தரப்பிலிருந்து அமைச்சு பெற்றுக் கொண்டதையும் சைஃபுடின் உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் போலீசார் ஒரு விசாரணை ஆவணத்தையும் திறந்துள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், சம்பந்தப்பட்ட 7 வீரர்களின் பிறப்புப் பத்திரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க தேசியப் பதிவிலாகாவின் உதவியை நாடியிருப்பதாகவும் சைஃபுடின் தெரிவித்துள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு