ஷா ஆலாம், ஜனவரி.23-
பிரசித்தி பெற்ற கால்பந்து கிண்ணமான உலகக் கிண்ணம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியா கொண்டு வரப்பட்டுள்ளது. 2026 உலகக் கிண்ண கால்பந்து போட்டியை முன்னிட்டு தங்க நிறத்திலான உலகக் கிண்ணம் சுமார் 75 நாடுகளில் காட்சிக்கு வைக்கக் கொண்டுச் செல்லப்படுகிறது.
அக்கிண்ணம் ஷா ஆலாமில் உள்ள ஸ்கைபார்க்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அது சன்வே பிரமிட் பேரங்காடியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்நிகழ்வுகளில் நாட்டின் பல முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.








