ஆஸ்திரேலியா, ஜனவரி.20-
ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் இந்தோனேசிய வீராங்கனை ஜனிசி ஜேன். 28 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தோனேசிய வீராங்கனையாக அவர் வரலாறு படைத்துள்ளார்.
முதல் சுற்று ஆட்டத்தில் ஜனிசி கனடிய வீராங்கனையை எதிர்கொண்டார். அவர் நேரடி செட்களில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு உலகத் தர வரிசையில் 413 ஆவது இடத்தில் இருந்த ஜனிசி, அண்மைய தர வரிசையில் 49 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.








