Oct 18, 2025
Thisaigal NewsYouTube
உலகக் கோப்பை தகுதி சுற்று: அணிகளின் தற்போதைய நிலை என்ன..?
விளையாட்டு

உலகக் கோப்பை தகுதி சுற்று: அணிகளின் தற்போதைய நிலை என்ன..?

Share:

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் முடிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த 6 அணிகள் தற்போது மோதுகின்றன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பதுடன் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

இந்த நிலையில் புலவாயோவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ்டோபர் மெக்பிரிட், மேத்யூ கிராஸ் களம் இறங்கினர். நிதானமாக ஆடிய மெக்பிரிட் 28 ரன்னிலும், மேத்யூ கிராஸ் 38 ரன்னிலும் போல்டாகி வெளியேறினர். அடுத்து வந்த பிரன்டன் மெக்முல்லன் (34 ரன்கள்), ஜார்ஜ் முன்சி (31 ரன்கள்), மைக்கேல் லீஸ்க் (48 ரன்கள்) சிறப்பாக ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்கள். இதற்கிடையே கேப்டன் ரிச்சி பெரிங்டன் (7 ரன்), கிறிஸ் கிரீவ்ஸ் (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

50 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 234 ரன்கள் சேர்த்தது. மார்க் வாட் 21 ரன்னுடனும், சப்யான் ஷாரிப் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், சதரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்ட் கும்பி ரன் ஏதுமின்றியும், கேப்டன் கிரேக் எர்வின் 2 ரன்னிலும், இன்னோசன்ட் கயா 12 ரன்னிலும், சீன் வில்லியம்ன்ஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். இதனால் அந்த அணி 37 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை (7.5 ஓவர்) இழந்து தடுமாறியது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசிய கிறிஸ் சோல் அவர்களை மிரள வைத்தார்.

Related News