பேங்காக், ஜனவரி.21-
தாய்லாந்து பாரா ஆசியான் போட்டி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியிருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு நக்கோன் ராட்சசிமா நகரம் மீண்டும் உலகக் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
மிகவும் கோலாகலமாகத் தொடங்கிய அவ்விழாவில் இசை நிகழ்ச்சி, லேசர் கண்கவர் படைப்பு, வானவேடிக்கை ஆகியவை இடம் பெற்றன. பல நாடுகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
மலேசிய அணிக்கு முஹமட் ஸார்ராவி ரவி அப்துல்லா தலைமையேற்றார். தேசிய பூப்பந்து வீராங்கனை நூர்சம்மீசாதுல் ஜாலூர் கெமிலாங் கொடியை ஏந்திச் சென்றார். பாரா ஆசியான் போட்டி இம்மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.








