Apr 17, 2026
Thisaigal NewsYouTube
114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!
விளையாட்டு

114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் மரணம்!

Share:

சண்டிகர், ஜூலை.15-

பஞ்சாபில் 114 வயது மாரத்தான் 'ஜாம்பவான்' பவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழந்தார். அச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங், தனது வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனத்தால் மோதப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல தரப்பினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1911ம் ஆண்டு ஏப்ரல் இந்தான் தேதி பிறந்த பவுஜா சிங் தனது 89 வயதில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 2003ம் ஆண்டு லண்டன் மாரத்தான் போட்டியில் 6 மணி நேரம் 2 நிமிடங்களில் இலக்கை அடைந்து 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் உலகச் சாதனைப் படைத்தார். 2011ம் ஆண்டு தன்னுடைய 100வது வயதில், டொரோண்டோ வாட்டர்ப்ரண்ட் மாரத்தான் போட்டியை 8 மணி நேரம் 11 நிமிடங்கள் 6 வினாடிகளில் கடந்து அசத்தினார். உலகின் முதல் 100 வயது நிரம்பிய மாரத்தான் 'ஜாம்பவான்' என்ற பெருமையைப் பெற்றார்.

இதனிடையே பவுஜா சிங்கின் மறைவையொட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related News

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

உபெர் கோப்பை: முதுகு வலி காரணமாக பியர்லி டான் விலகல் - மலேசிய அணிக்குப் பின்னடைவு

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

மெஸ்ஸியின் முன்னாள் குரு ஹோயோஸ் இனி இன்டர் மியாமி பயிற்சியாளர்: நட்புக்கு அப்பாற்பட்ட கண்டிப்பு உறுதி

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

தாமஸ் மற்றும் ஊபர் கோப்பை: டென்மார்க்கில் 'பாதிப்பு' பயிற்சிகளுடன் களமிறங்கும் மலேசிய அணி!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

பிக்கிள்பால் மலேசியா ஓபன் 2026: 70,000 ரிங்கிட் பரிசுத் தொகையுடன் அதிரடித் தொடக்கம்!

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

16 ஆண்டுகால நாக்-அவுட் தாகத்தைத் தணிக்குமா மலேசியா? பயிற்சியாளர் இஸ்கந்தர் நம்பிக்கை

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!

தாமஸ் கோப்பை 2026: மலேசியாவை ‘கறுப்பு குதிரை’யாகப் பார்க்கிறார் லீ ஜி ஜியா!