Jun 14, 2026
Thisaigal NewsYouTube
விளையாட்டு

இப்படி 3 முறை நடந்துச்சுனா எதிர் அணிக்கு 5 ரன்கள்- ஐசிசி அதிரடி

Share:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையில் ஸ்டாப் கடிகாரங்கள் பயன்படுத்தப்படும்.

ஸ்டாப் கடிகாரங்களின் அறிமுகம் தற்போது சோதனை அடிப்படையில் டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும்.

புதிய விதிமுறைப்படி முந்தைய ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும்.

அப்படி தயாராகத பட்சத்தில், ஒரு இன்னிங்சில் இதேபோல் மூன்றாவது முறை நிகழும்போது 5 ரன்கள் பந்து வீச்சு அணிக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி அறிவித்துள்ளது.

Related News