Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கால்பந்து நாயகன் லியோனல் மெஸ்சியுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கும் கசெமிரோ
விளையாட்டு

கால்பந்து நாயகன் லியோனல் மெஸ்சியுடன் இணைந்து விளையாட ஆவலுடன் காத்திருக்கும் கசெமிரோ

Share:

கால்பந்து வீரர் கசெமிரோ மான்செஸ்டர் யுனைட்டெட் அணியிலிருந்து விலகி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்ததைத் தொடர்ந்து, தனது நீண்டநாள் பரம எதிரியான லியோனல் மெஸ்சியுடன் ஒரே அணியில் விளையாட ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் ஸ்பானிய லீக் போட்டிகளில் லியோனல் மெஸ்சியை எதிர்த்து விளையாடிய கசெமிரோ, அவரை "கால்பந்தின் கடவுள்" என்று புகழ்ந்துள்ளதோடு, இனி அவரைத் தடுக்கும் பணி தனக்கு இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்டர் மியாமி அணியில் மெஸ்சியுடன் இணைந்து விளையாடுவதும், அவருக்குத் துணையாக இருப்பதும் தனக்கு பெருமை அளிப்பதாகக் கூறியுள்ள அவர், பயிற்சிகளின் போதும் மெஸ்சியைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று என்பதைத் தான் உணர்ந்ததாகக் கூறியுள்ளார்.

Related News

கால்பந்து நாயகன் லியோனல் மெஸ்சியுடன் இணைந்து விளையாட ஆவலு... | Thisaigal News