ஆவண சர்ச்சை தொடர்பாக அனைத்துலக கால்பந்து சம்மேளமான ஃபிஃபாவால், 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த மலேசியாவின் ஏழு பாரம்பரிய கால்பந்து வீரர்களும், இன்று முதல் மீண்டும் அனைத்து கால்பந்து போட்டிகளிலும் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளனர்.
இதனை எம்ஃபெல் (MFL) எனப்படும் மலேசிய கால்பந்து லீக்கின் தலைமைச் செயலதிகாரி ஷாஸ்லி ஷயிக் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜோகூர் டாருல் தக்சிம் அணியின் நான்கு வீரர்கள் உட்பட அந்த ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தடை நேற்று நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் மலேசிய தேசிய அணியில் விளையாடத் தகுதி பெற்றதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து ஃபிஃபா இந்தத் தடையை விதித்திருந்தது.
கடந்த மார்ச் மாதம், விளையாட்டு நடுவர் தீர்ப்பாயமான சிஎஎஸ் வழங்கிய தீர்ப்பின்படி, வீரர்களின் 12 மாதத் தடையானது அதிகாரப்பூர்வப் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போது அந்தத் தடைக்காலமும் முடிவடைந்துள்ளதால் அவர்கள் மீண்டும் கால்பந்து நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








