மலேசியாவைப் பிரதிநிதித்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதுடன், ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்ற முன்னாள் தேசிய சைக்கிள் பந்தய வீரர் ங் ஜூ போங், தனது 80ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவை, முன்னாள் தேசிய சைக்கிள் பந்தய வீரரும் தம்பியுமான டத்தோ ங் ஜூ ஙான் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
‘சாலைகளின் மன்னன்’ என்று அழைக்கப்பட்ட ங் ஜூ போங், 1964ஆம் ஆண்டு தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று, ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்த முதல் சைக்கிள் பந்தய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 1968ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார்.
1970ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அவர், அதே ஆண்டுக்குப் பிறகு போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது முறையாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏப்ரலில் ரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.








