சிப்பாங் அனைத்துலக கார் பந்தயமான பஹ்ரேன் கல்ஃப் ஏர் எஃப்1 கிரான்ட் பிரிக்ஸ் போட்டி அண்மையில் நடைபெற்ற வேளையில் மலேசியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 345 மில்லியன் ரிங்கிட் அளவுக்கு பொருளாதாரப் பலனை ஏற்படுத்தியுள்ளதாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியை 2 லட்சத்து 61 ஆயிரம் பேர் நேரில் கண்டதாகவும், அவர்களில் ஏறத்தாழ பாதி பேர் வெளிநாட்டுப் பயணிகள் என்றும் அவர் கூறினார். F1 போட்டியைக் காண வந்தவர்கள் வழக்கமான நிகழ்வுகளைக் காட்டிலும் 2.17 மடங்கு அதிகமாகச் செலவிடுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தங்குமிடம், உணவு, பானங்கள், சில்லறை விற்பனை, போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள சிறு, நடுத்தர தொழில்கள் இதன் மூலம் அதிகப் பயனடைந்ததாக ஸ்டீவன் சிம் கூறினார்.
இது போன்ற அனைத்துலக விளையாட்டு நிகழ்வுகளைப் பயன்படுத்தி சிறு தொழில்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








