Nov 21, 2026
Thisaigal NewsYouTube

தேசிய அளவில் ராக்கான் மூடா திருவிழா: 5,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தேசிய அளவில் ராக்கான் மூடா திருவிழா: 5,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பு

மலேசிய இளைஞர்களின் திறமைகள், ஆர்வங்கள் மற்றும் ஆற்றலை வெளிப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ஃபியஸ்தா ராக்கான் மூடா திருவிழா கோலாலம்பூரில் உள்ள லாலாபோர்ட் புக்கிட் பிந்தாங் சிட்டி செண்டரில் இன்று நவம்பர் 21 தொடங்கி நாளை நவம்பர் 22 -ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது.

இந்நிகழ்ச்சியை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முஹமட் தௌஃபிக் ஜொஹாரி பார்வையிட்டு இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

மாநில அளவில் ஏற்கெனவே பல கட்டங்களாக நடத்தப்பட்ட இவ்விழா, தற்போது தேசிய அளவில் இரண்டு நாட்கள் நடைபெறுவதாகவும், இதில் சுமார் 5,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பள்ளிகள் மட்டுமின்றி பணியிடங்கள் மற்றும் நண்பர்களிடையேயும் நிலவும் பகடிவதையைத் தடுக்கும் நோக்கில், பெக்கா ராசா அந்தி-பூலி (Peka Rasa Anti-Buli) என்ற விழிப்புணர்வு முயற்சியும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

பகடிவதையின் பாதிப்புகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனைத் தடுப்பதில் அவர்களே முன்வந்து செயல்பட வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என அமைச்சர் விளக்கமளித்தார்.

இதனிடையே, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை மாநில அளவில் 14 இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 34 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →