கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள ஹைரோக்ஸ் (HYROX) உடற்பயிற்சிப் போட்டிக்கு, மதுபான நிறுவனம் வழங்கும் நிதியுதவி விலக்கிக் கொள்ளப்படாவிட்டால் அனுமதி வழங்கப்படாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் தௌஃபிக் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான விளையாட்டு நடத்தை விதிமுறைகளின்படி, மதுபானம், புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் நிறுவனங்கள் விளையாட்டுப் போட்டிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறுவோருக்கு 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அதேவேளையின் போட்டியின் அதிகாரப்பூர்வ விளம்பரங்கள், சின்னங்கள் மற்றும் வர்த்தக முத்திரைகள் அனைத்திலிருந்தும் மதுபான நிறுவனத்தின் அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
போட்டிக்கான விண்ணப்பம் இன்னும் பரிசீலனையில் உள்ளதுடன், அமைச்சு இதற்கு எந்த நிதியுதவியும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








