சிப்பாங் அனைத்துலக கார் பந்தய சிர்கட்டில் நடைபெற்ற வளைகுடா ஏர் பஹ்ரைன் அனைத்துலக கார் பந்தயத்தை காண, மூன்று நாட்களில் 2 லட்சத்து 61 ஆயிரம் ரசிகர்கள் திரண்டனர். இது சிப்பாங் கார் பந்தய சிர்கட்டின் புதிய சாதனையாகும்.
இதற்கு முன் 2008ஆம் ஆண்டு மலேசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியைக் காண 1 லட்சத்து 26 ஆயிரத்து 690 பேர் திரண்டதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இம்முறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியை மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் நேரில் கண்டுகளித்தனர்.
இந்த எண்ணிக்கை பஹ்ரைன் அனைத்துலக கார் பந்தயப் போட்டியின் தலைமைச் செயல் அதிகாரி ஷைக் சல்மான் இசா அல் கலிஃபாவால் உறுதிப்படுத்தப்பட்டதாக சிப்பாங் அனைத்துலக கார் பந்தய சிர்கட் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக ரத்து செய்யப்பட்ட பஹ்ரைன் கார் பந்தயம், மலேசியா–பஹ்ரைன் அரசுகளின் உடன்பாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை சிப்பாங் திடலில் நடைபெற்றது.








