Nov 11, 2026
Thisaigal NewsYouTube

குழு விளையாட்டு வீரர்களுக்கு ரிம.40,000 ஊக்கத்தொகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குழு விளையாட்டு வீரர்களுக்கு ரிம.40,000 ஊக்கத்தொகை

அனைத்துலக குழு விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்படும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து 40 ஆயிரம் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், தேசிய விளையாட்டு மன்றமும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.

இதன்படி, வெள்ளிப் பதக்கத்துக்கு 20 ஆயிரம் ரிங்கிட்டும், வெண்கலப் பதக்கத்துக்கு 10 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும்.

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு குழு விளையாட்டுகளுக்கான ஊக்கத்தொகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உயர்வு, 2026ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த், ஆசிய மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பொருந்தும்.

இதற்காக கூடுதலாக 1.152 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து, அனைத்துலகப் போட்டிகளில் மலேசியாவின் வெற்றியை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு வீரர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →