சிலாங்கூர் தடகளச் சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து உட்பட ஐந்து முன்னாள் நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையைப் புதிய நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
சங்கத்தின் புதிய தலைவர் கணேஷ் மருதமுத்து தலைமையில் நடைபெற்ற முதலாவது நிர்வாகக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, எஸ்.எம். முத்து, கே. பிரகாஷ், ஆர். முருகன், ஜி. மோகன் மற்றும் எஸ். குணசீலன் ஆகியோரின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும், ஆறாவது நபரான பௌஸி நனிவன் அப்துல்லா மீதான தடை தொடர்ந்து அமலில் இருக்கும்.
மேலும், டத்தோ எஸ்.எம். முத்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும், தேசிய தடகளச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுப் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்ற மூவருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகள் குறித்து விளையாட்டு ஆணையர் மற்றும் தேசிய தடகளச் சம்மேளனத்துக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும் என கணேஷ் கூறியுள்ளார்.








