Oct 4, 2026
Thisaigal NewsYouTube

சிப்பாங் F1 பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிப்பாங் F1 பந்தயத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்

சிப்பாங் அனைத்துலக பந்தய சுற்றுப்பாதையான எஸ்ஐசியில் நடைபெற்று வரும் ஃபோர்முலா 1 பந்தயத்தின் இறுதி நாளான இன்று, அதனைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

ரசிகர்களின் வருகையை சீரமைக்க கூடுதல் பேருந்து சேவைகளும், பணியாளர்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை 11 மணி முதலே ரசிகர்கள் எஸ்ஐசிக்கு வரத் தொடங்கியிருந்தனர்.

மேலும், கடந்த சில நாட்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண சிரமங்களை எதிர்கொண்ட ரசிகர்களுக்கு, இன்று கூடுதல் பேருந்துகள் மற்றும் வழிகாட்டும் பணியாளர்கள் இருப்பது பயணத்தை எளிதாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஎல்ஐஏ முனையம் 2, மிட்சுய் அவுட்லெட் பார்க், சிப்பாங் மற்றும் பண்டார் பாரு எயின்ஸ்டெக், நீலாய் ஆகிய இடங்களில் இருந்து இலவச பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன.

9 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் F1 மீண்டும் நடைபெறுவதால் ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது.

இதனிடையே, வெயில் அதிகமாக இருப்பதால் எஸ்ஐசி நுழைவாயில் அருகே ரசிகர்களுக்காக குடிநீர் நிலையமும் அமைக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →