Oct 4, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் மீண்டும் F1 பந்தயம் நடந்த ஆலோசனை - அன்வார் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் மீண்டும் F1 பந்தயம் நடந்த ஆலோசனை - அன்வார் தகவல்

மலேசியாவில் ஃபோர்முலா 1 பந்தயத்தை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையான எஸ்ஐசியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற F1 பந்தயத்தைக் காண வருகை புரிந்த அன்வாரிடம், முன்னாள் F1 வீரரும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளருமான மார்டின் பிருண்டல் கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவிற்கு மீண்டும் F1 பந்தயம் கிடைக்க வாய்ப்புள்ளதா? என மார்டின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், “நானும் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.

அதேவேளையில், கனமழையில் தான் முற்றிலும் நனைந்த போதிலும், F1 பந்தயம் நடைபெறுவது குறித்து மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகவும், நாடே மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.

கடந்த 1999 முதல் 2017 -ஆம் ஆண்டு வரை எஸ்ஐசியில் மலேசியன் கிராண்ட் பிரீ பந்தயமானது தொடர்ந்து நடைபெற்றது.

எனினும், போட்டி நடத்தும் செலவு மற்றும் குறைந்து வந்த வருவாய் காரணமாக 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தப் பந்தயம் நிறுத்தப்பட்டது.

தற்போது மத்திய கிழக்கு மோதல் காரணமாக பாதுகாப்பு காரணங்களால் பாஹ்ரென் கிராண்ட் பிரீ தற்காலிகமாக எஸ்ஐசிக்கு மாற்றப்பட்டுள்ளதால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிப்பாங்கில் F1 பந்தயம் மீண்டும் நடைபெற்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in விளையாட்டு →