டென்னிஸ் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி. டென்மார்க்கை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். கடந்த 2020-ம் ஆண்டு தனது 29-வது வயதில் வோஸ்னியாக்கி, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இவர் முன்னாள் கூடைப்பந்து வீரர் டேவிட் லீயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன். நான் இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஆனால் நான் இன்னும் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளது.








